பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’ : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
‘C’ : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
‘D’ : “இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
‘E’ : கௌரவ சி. சிறீதரன், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2013 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்;
• 2015 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் VII, VIII, IX மற்றும் X பகுதிகளையும்; மற்றும்
• 2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் பத்தாவது தொகுதியின் X பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம் பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(x) 2018 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
(xii) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கைகள்
(xiii) 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xiv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xv) 2016 ஆம் ஆண்டுக்கான சீதுவ விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை
(xvi) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை
(xvii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையையும் கணக்குகளும்
(xviii) 2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் ஆண்டறிக்கை
(xix) 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்
(xx) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xxi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xxii) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்
(xxiii) 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கைகள்
(xxiv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(xxv) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xxvi) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(xxvii) 2017 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிச் சபையின் ஆண்டறிக்கை
(xxviii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு, பிராந்திய அபிவிருத்தி பிரிவு மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxix) (469 ஆம் அத்தியாயமான) தாவர, வனவிலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2(2) ஆம் பிரிவின் கீழ் கொட்டுஅத்தாவல சரணாலயம் தொடர்பில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 பெப்ருவரி 23 ஆம் திகதிய 2007/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xxx) (469 ஆம் அத்தியாயமான) தாவர, வனவிலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2(2) ஆம் பிரிவின் கீழ் கொடிகஹாகந்த சரணாலயம் தொடர்பில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 ஒக்டோபர் 03 ஆம் திகதிய 2039/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xxxi) (469 ஆம் அத்தியாயமான) தாவர, வனவிலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2(2) ஆம் பிரிவின் கீழ் காயன்கேணி கடலோர சரணாலயம் தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்பிறல் 11 ஆம் திகதிய 2118/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxii) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வை விலக்களிப்புக்கள் தொடர்பல் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதிய 2143/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxiii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxxiv) 2008 யூன் 10 ஆம் திகதிய 1553/10 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இலங்கையின் தேசிய மின்சக்திக் கொள்கை மற்றும் உத்திகளை மீள் பரிசீலனை செய்து திருத்தியமைத்து அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் 2019 ஓகஸ்ட் 9 ஆம் திகதிய 2135/61 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையின் தேசிய மின்சக்திக் கொள்கை மற்றும் உத்திகள்
(xxxv) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 61(1)(த இ) மற்றும் 61(1)(த ஈ) பிரிவின் கீழ் இலங்கை நீர்ப்பரப்பினுள் மீன் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்களை பேணிக்காத்தல் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச் 03 ஆம் திகதிய 2008/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xxxvi) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 28 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் மீன்பிடித் தொழிற்பாடுகளில் ஈட்டிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தல் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச் 03 ஆம் திகதிய 2008/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xxxvii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் பிரிவு 29 மற்றும் பிரிவு 61 (1) (ப) என்பனவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் தம்புவா மீன் இனங்களைப் பிடிப்பதைத் தடைசெய்தல் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஏப்றல் 11 ஆம் திகதிய 2014/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xxxviii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 61(1)(ப) பிரிவின் கீழ் மீன் மற்றும் மீன் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முகாமைத்துவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமானவரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 15 ஆம் திகதிய 2023/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xxxix) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 61(1)(ஐ) மற்றும் 61(1)(ந) பிரிவின் கீழ் சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கும், தலையிடுவதற்கும், ஒழிப்பதற்குமான துறைமுக அரச வழிமுறைகளை அமுலாக்கல் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமானவரால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 13 ஆம் திகதிய 2027/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xl) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் மீன்கள் தரையிறக்கல் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமானவரால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 13 ஆம் திகதிய 2027/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xli) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 64 ஆம் பிரிவின் (அ) பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 61 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) பந்தியின் கீழ் மாதல் மீன்பிடி (கரைவலை) தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஏப்றல் 05 ஆம் திகதிய 2065/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xlii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 61(1)(ந) பிரிவின் கீழ் வெளிநாட்டுக் கொடி ஏற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடித் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற இலங்கைப் பிரசைகளுக்கான ஆகக்குறைந்த நியமங்கள் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 25 ஆம் திகதிய 2107/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xliii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 பிரிவின் கீழ் மீன்பிடித் தொழிற்பாடு தொடர்பில் கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 18 ஆம் திகதிய 2115/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xliv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks