பார்க்க

E   |   සි   |  

2019 மே 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள பிரதியீட்டு மற்றும் மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(vi)    2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகள் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டு அறிக்கை
(viii)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(x)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பாக   நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 05 ஆம் திகதிய 2113/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 01/2019)
(xi)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 12, 14, மற்றும் 22 ஆம் பிரிவுகளின் கீழ்,  மதுவரி தொடர்பாக   நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 05 ஆம் திகதிய 2113/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 02/2019)
(xii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பாக   நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 05 ஆம் திகதிய 2113/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 03/2019)

(xiii)    2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 13 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 117 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 செப்டெம்பர் 06 ஆம் திகதிய 2087/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xiv)    2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் கல்வி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை  அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ லக்கி ஜயவர்தன                               
(ii)    கௌரவ கருணாரத்ன பரணவிதான                   
(iii)    கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(iv)    கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொதி

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

ஊழியர் சேமலாப நிதிய பண முதலீடு


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, மக்கள் வங்கிச் சட்டத்தினைத் திருத்துவதற்காக

“மக்கள் வங்கி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2019 மே 22ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் அதற்கு எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பூநகரி, ஜெயபுரத்தில் வாழும் மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks