01

E   |   සි   |  

 விலைமனு

 2026-01-25 

பாராளுமன்றத்திற்கான பணியாளர் சீருடைகளையும் துணிகளையும் சலவை செய்வதற்கான பெறுகை விடயம் - 2026/27

கேள்வி விலைமனுக்களுக்கான அழைப்பு

பாராளுமன்றத்திற்கான பணியாளர் சீருடைகளையும் துணிகளையும் சலவை செய்வதற்கான பெறுகை விடயம் - 2026/27

2026/27 ஆம் ஆண்டிற்கு பாராளுமன்ற பணியாளர் சீருடைகளையும் துணிகளையும் சலவை செய்வதற்கான பெறுகை விடயத்திற்கு 2026 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை பின்வரும் மூன்று வகுதிகளின் நிமித்தம் பொறியிடப்பட்ட தனித்தனியான கேள்வி விலைமனுக்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழைக்கப்படுகின்றன.


வகுதிவிபரம்விலைமனு பிணைமுறி
1பாராளுமன்ற கட்டிடத்திற்கும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் சலவை சேவைகளை பெற்றுக்கொள்ளல்ரூ. 139,230/-
2நுவரெலிய சேனாதிபதி இல்லத்திற்கு சலவை சேவைகளை பெற்றுக்கொள்ளல்ரூ. 17,213/-
3அனுராதபுர மெத்செவன இல்லத்திற்கு சலவை சேவைகளை பெற்றுக்கொள்ளல்ரூ. 5,430/-


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகுதிகளுக்கு ஒரு கேள்வி விலைமனுதாரர் கேள்வி விலைமனுக்களை குறித்தனுப்பலாம். ஆனால், தனித்தனி ஆவணங்களும் கேள்வி விலைமனு பிணைமுறிகளும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.


ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட கேள்வி விலைமனு ஆவணங்களை இப்பக்கத்தின் ஊடாக 2026 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு, உதவி பணிப்பாளர் (நிருவாகம்) - வழங்கல்கள் மற்றும் சேவைகள் அலுவலகத்தை 011-2777358 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும். 


பாராளுமன்ற செயலாளர் நாயகம் 
இலங்கை பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks