01

E   |   සි   |  

 திகதி: 2018-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0497/2018: Education Department Uva Province audit query

1738/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு ஏற்புடையதாக, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் தொடர்பாக 2016.10.18 ஆம் திகதிய கணக்காய்வு வினாவொன்று வெளியிடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா;

(ii) ஆமெனில், அக்கணக்காய்வு வினாவில் பாடசாலை அடிப்படையிலான முகாமைத்துவம் மற்றும் பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பாக தாய்லாந்திலும் பிலிப்பைனிலும் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி செயலமர்வுகளுக்கு ஏற்புடையதாக, இலக்கம் 2, ஆ, இ, ஈ, உ, ஊ ஆகிய பிரிவுகளிலுள்ள விடயங்கள் மற்றும் 03 ஆம் இலக்க பந்தியிலுள்ள விடயங்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;

(iii) அதன்போது நடைபெற்றுள்ள ஏதேனும் முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வாரா;

(iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks