01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0484/2018: Television Channels

கௌரவ லக்கி ஜயவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் இலங்கையில் பேணிவரப்படுகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை யாது;

(ii) ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையையும் பேணிவருகின்ற நிறுவனம் தனித்தனியாக யாது;

(iii) ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையினதும் உரிமையாளர்கள் யார் மற்றும் மேற்படி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள திகதிகள் வெவ்வேறாக யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டுவராத தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளனவா;

(​ii) ஆமெனில் அந்த அலைவரிசைகள் யாவை;

(iii) தொலைக்காட்சி அலைவரிசைகள் எவரால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன;

(iv) மேற்படி ஒழுங்குமுறைப்படுத்தல் முறைப்படி அமுலாக்கப்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

(v) ஒருசில அலைவரிசைகள் ஊடாக தீயகருத்துடனும் அவமதிப்பு ஏற்படக்கூடிய வகையிலும் மேற்கொள்ளப்படுகின்ற பாரதூரமான சமூகப் பாதிப்பினைத் தடுப்பதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒழுங்குமுறைப்படுத்து வதற்கான துரிதமான முறைசார்ந்த முறையிலொன்றை தயாரிப்பாரா;

(vi) ஆமெனில், அது எவ்வாறு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks