01

E   |   සි   |  

 திகதி: 2018-10-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0264/2018: Politically motivated road projects Sabaragamuwa PC and investigations into the same

264/'18

கௌரவ ஹேஷா விதானகே,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சப்ரகமுவ மாகாண சபையின் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2017 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட்ட வீதிக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டங்களை செயற்படுத்துகையில் அரசியல் தேவைப்பாடுகளின் பேரில் அனாவசியமாக பணம் செலவிடப்பட்ட சில திட்டங்கள் உள்ளனவென்பதையும், அது தொடர்பாக கணக்காய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) அரசியல்வாதிகளின் தேவைகளின்பேரில் செயற்படுத்தப்படும் ஒழுங்கற்ற கருத்திட்டங்களின் ஊடாக ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-25

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks