01

E   |   සි   |  

 திகதி: 2018-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0232/2018: Urban Housing Schemes - Colombo

232/ '18

கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எதிர்வரும் 03 வருடங்களினுள் ஆரம்பிக்கப்படவுள்ள கொழும்பு மாவட்டத்தின் நகர வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) இந்த வீடமைப்புக் கருத்திட்டங்களுக்கென திட்டவட்டமாக காணிகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனில், அக்காணிகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டங்களுக்குச் செலவிட உத்தேசித்துள்ள மொத்த பணத்தொகை யாது என்பதையும்;

(ii) இதற்குத் தனியார் துறையின் முதலீடுகள் காணப்படுமாயின், அவை யாவை என்பதையும்;

(iii) அரச மற்றும் தனியார் முதலீடுகளின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டங்களை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்ற தினங்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்களிலுள்ள ஒரு வீட்டின் மொத்தப் பெறுமதி யாது என்பதையும்;

(vi) மேற்படி வீடுகளை பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks