01

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0231/2018: Deeds for the people who received apartments after Meethotamulla tragedy

231/ '18

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2012ஆம் ஆண்டில் மீதொட்டமுல்ல குப்பைமேடு விரிவாக்கப்பட்டதன் காரணமாக வீடுகளை இழந்த 160 குடும்பங்களுக்கு 2014.12.01ஆம் திகதி சாலமுல்ல "லக்சந்த செவண" மாடி வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) குறித்த வீடுகள் வழங்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள் இவர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அறுதியுறுதிகள் வழங்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது என்பதையும்;

(iii) இதுவரை மேற்படி குடியிருப்பாளர்களுக்கு உறுதிகள் கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) அறுதியுறுதிகள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) ஏதேனும் சிக்கல் நிலை காணப்படின், அவற்றைத் தீர்த்து இந்த வீடுகளுக்கு அறுதியுறுதிகளை வழங்க முடியுமான திட்டவட்டமான காலப் பகுதி யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks