01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0228/2018: Bridge constructed in Kilinochchi under 1000 bridges project

2112/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 'ஆயிரம் பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டம்' என்பதன் கீழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊற்றுப்புலம், வள்ளுவர்பண்ணை கிராமங்களை நோக்கிச் செல்கின்ற பிரதான வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மாணப் பணிகள் 2016 ஆகஸ்ட் மாதம் 25 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;

(ii) இதன் ஒப்பந்தகாலம் 2017 மே மாதம் 21 ஆந் திகதி நிறைவடைந்ததென்பதையும்;

(iii) எனினும் மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இற்றைவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கான ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில் மேற்படி நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-19

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks