01

E   |   සි   |  

 திகதி: 2018-08-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0052/2018: Proposals 152- Budget 2016

52/ '18

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 152 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான பிணை நிதியத்தின் கீழ், இறால் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையின் அளவு மற்றும் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி பிரேரணையின் பிகாரம் அனுகூலங்களைப் பெற்றுக்கொண்ட இறால் பண்ணையாளர்கள், இனப்பெருக்கச் செயற்பாட்டாளர்கள் மற்றும் திட்டமிடலாளர்கள் என்போரின் பெயர்ப் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) 2017 ஆம் ஆண்டில் இறால் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக நிதி அமைச்சினால் பெற்றுத்தரப்படும் பங்களிப்பு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-08

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks