01

E   |   සි   |  

 திகதி: 2018-09-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0029/2018: Unapproved road built by filling paddy field Ganga ihala kandy

2126/ '17

கெளரவ ஆனந்த அளுத்கமகே,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி மாவட்டத்தின், கங்க இஹல கமநல ஆளுகைப் பிரதேசத்தின், கிரிஉல்ல விஹாரைக்கு உரித்தான ஜம்புகஹமுலதெனிய எனும் வயல் முறையான அனுமதியின்றி நிரப்பப்பட்டு தனியார் வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) இதற்கு போலி ஆவணங்களை தயார் செய்ய அரச நிதி செலவிடப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) கமத்தொழில் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளருக்கான வீட்டுக்கான பிரவேசப் பாதையாகவே மேற்படி வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) மேற்படி வீதியின் ஆரம்பப் பகுதியும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(v) இந்த இடத்தில் நடைபாதையொன்றேனும் இருக்கவில்லை என்பதையும்; பிரதேச சபைக்கு உரித்தானதல்ல என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) பொது மக்களின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்துகின்ற இவ்வாறான அலுவலர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-04

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks