01

E   |   සි   |  

 திகதி: 2018-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2281/2018: Hooch dens raided

2281/ '17

கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த சில ஆண்டுகளினுள் இந்நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு கள்ளச் சாராயப் (கசிப்பு) பாவனை அதிகரித்துள்ளதா என்பதையும்;

(ii) மேற்கொள்ளப்படுகின்ற கள்ளச் சாராய (கசிப்பு) சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) 2015, 2016 ஆம் ஆண்டுகளிலும் மற்றும் 2017 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள கள்ளச் சாராயம் (கசிப்பு) விற்பனை செய்யப்படுகின்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் கைப்பற்றப்பட்ட கள்ளச் சாராய லீட்டர்களின் அளவு ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iv) நாட்டில் கள்ளச் சாராயம் (கசிப்பு) உற்பத்தியை தடுக்க அமைச்சு மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-01-24

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks