01

E   |   සි   |  

 திகதி: 2017-12-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

2217/2017: Removal of Land Mines in Muhamalai

2217/ '17

கௌரவ எஸ். சிறீதரன்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை கிராமம் தொடர்பாகவும்;

(ii) அக்கிராமத்தின் நிலப் பரப்பு மற்றும் சனத்தொகை தொடர்பாகவும்;

(iii) மேற்படி பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றை தற்போது அகற்றுகின்ற வேலைத்திட்டத்திற்காக நிதி உதவி வழங்குகின்றவர்கள் தொடர்பாகவும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) நிலக்கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு எடுக்கப்படும் காலம் யாதென்பதையும்;

(ii) மேற்படி பிரதேசத்கை பொது மக்களுக்குக் குடியிருப்பதற்காக ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) மீளக் குடியமர்த்துதல், வீடமைப்புத் திட்டங்கள் போன்ற வசதிகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-07

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks