01

E   |   සි   |  

 திகதி: 2017-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2216/2017: The Funds of TRO

2216/ '17

கௌரவ எஸ். சிறீதரன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2006 ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர் புனர்வாழ்வுக் அமைப்பு என்ற பெயரில் தொண்டர் அமைப்பொன்று இயங்கி வந்தது என்பதையும்;

(ii) 2006 ஆம் ஆண்டின் பின்னர் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;

(iii) மேற்படி அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டபோது பல கோடி ரூபா பணம் இலங்கையில் அமைந்துள்ள வங்கிகளினால் முடக்கப்பட்டது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) தமிழர் புனர்வாழ்வுக் அமைப்பு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட தொண்டர் அமைப்பொன்றாக இயங்கி வந்த காலப்பகுதி யாதென்பதையும்;

(ii) மேற்படி அமைப்பு இலங்கையில் கணக்குகளைப் பேணிவந்த வங்கிகள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு வங்கியிலும் வைப்புச் செய்யப்பட்டிருந்த பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி தொண்டர் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) தடை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவ்வமைப்பு கொண்டிருந்த அசையும், அசையா மற்றும் திரவத் தன்மையுடைய சொத்துக்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(iii) அச்சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-16

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks