01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2152/2018: Roads belonging to Wayamba Provincial Road Development Authority

2152/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய வீதிகளின் கிலோமீற்றர் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைய வெவ்வவேறாக எவ்வளவு;

(ii) அந்த எண்ணிக்கை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தரப்படுத்தல்களுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு;

(iii) 2013, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய புத்தளம் மாவட்டத்தில் காபற் இடப்பட்ட வீதிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக எவ்வளவு;

(iv) வடமேல் மாகாணசபைக்குரிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் நிதி ஏற்பாடுகளை வழங்கும் மூலங்கள் யாவை;

(v) 2013, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மேற்படி மூலங்களின் கீழ் புத்தளம் மாவட்டத்தில், மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு மூலத்துக்கும் அமைய வெவ்வேறாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-23

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks