01

E   |   සි   |  

 திகதி: 2017-11-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

2118/2017: Persons died, houses damaged by Floods and Earth-slips in Kalutara District 2017

கௌரவ ஜயந்த சமரவீர,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ (i) 2017.05.27 ஆந் திகதியன்று ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் களுத்துறை மாவட்டத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன ஆட்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்த ஆட்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் காணாமல்போன ஆட்களின்,

(i) பெயர், முகவரி, வயது, தொழில் மற்றும் ஆண்/பெண் பால்நிலை;

(ii) கிராம அலுவலர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு;

(iii) நெருங்கிய உறவினரின் பெயர் மற்றும் முகவரி;

யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) அவ்வாறு உயிரிழந்த அல்லது காணாமல்போன ஆட்களுக்காக இன்றளவில் இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி ஆட்களின் பெயர்களும் செலுத்தப்பட்ட பணத் தொகையும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) இழப்பீடுகள் செலுத்தி முடிக்கப்படவுள்ள திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-11

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks