01

E   |   සි   |  

 திகதி: 2018-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2070/2018: Problems faced by people resettled in Manatchenai Eruhasapuram

2070/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2013 ஆம் ஆண்டில் திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மணற்சேனை இருதயபுரம் கிராமத்தில் 125 க்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனரென்பதையும்;

(ii) மேற்படி மக்கள் அக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்ட காலம் தொடக்கம், அடிப்படை வசதிகளும் நிரந்தர வீடுகளும் வழங்கப்படாமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனரென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளையும் நிரந்தர வீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-20

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks