01

E   |   සි   |  

 திகதி: 2017-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1680/2017: மருத்துவ உத்தியோகத்தர்கள் இன்மையால் தற்காலிகமாக மூடப்பட்ட பிரதேச வைத்தியசாலைகள்: மட்டக்களப்பு மாவட்டம்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாங்கேணி, மகிழூர், மாஞ்சோலை, உன்னிச்சை, கதிரவெளி, மண்டூர் மற்றும் மகிளவட்டுவான் பிரதேச வைத்தியசாலைகள் மருத்துவ உத்தியோகத்தர்கள் தேவைப்படும் காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) கட்டிடங்கள் ஏனைய வசதிகளுடனும் பெயர்ப் பலகைகளுடனும் உள்ளன என்பதையும்;

(iii) இப் பிரதேச மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக மோசமான போக்குவரத்து வசதிகளுடன் தூர இடங்களுக்கு பயணம் செயவதன் மூலம் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதையும்;

(iv) வறிய கிராமங்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்குதல் எனும் எண்ணக்கரு பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த வைத்தியசாலைகளை மீளத் திறந்து அவற்றிற்கு குறைந்தது இரண்டு மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) இவ்வைத்திய சாலைகள் செயற்படுவதற்காக மீளத்திறக்கப்படும் திகதியினையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-21

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)      මාන්කර්නි ප්‍රාථමික වෛද්‍ය ආයතනය පමණක් තාවකාලිකව වසා ඇත.

               (ii)      ඔව්.

              (iii)      පැන නඟිනුයේ මාන්කර්නි ප්‍රාථමික වෛද්‍ය ආයතනය සඳහා පමණි.

              (iv)      පැන නොනඟී.

(ආ)           (i)      2017 වර්ෂයේ වෛද්‍යවරුන් දැනටමත් ලබා දී ඇති අතර, නව පශ්චාත් සීමාවාසික වෛද්‍යවරුන් පත් කිරීමේදී මාන්කර්නි රෝහලට වෛද්‍යවරුන් ලබා දීමට බලාපොරොත්තු

වේ.

(ii) මාන්කර්නි රෝහල නව පශ්චාත් පුහුණු පත්වීම් ලබා දුන් වහාම යලි විවෘත කළ හැක.

(ඇ) පැන නොනඟී.

பதில் தேதி

2017-09-21

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks