01

E   |   සි   |  

 திகதி: 2017-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

1649/2017: Paddy purchased by Paddy Marketing Board sold to mill owners

1649/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சிறுபோகம் மற்றும்பெரும்போகங்களில்,

(i) நெல் விளைச்சல்;

(ii) நெல் உற்பத்தியில், நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்த அளவு;

(iii) நெல் சந்தைப்படுத்தும் சபையினால் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் விற்கப்பட்டிருப்பின், அந்த நெல்லினை கொள்வனவு செய்தவர்களின் பெயர்கள் மற்றும் நெல் கிலோவொன்றின் விற்பனை விலை;

ஆகியன ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக யாவையென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபை பாதுகாப்புக் கையிருப்புத் தொகையாக பேணிவரும் நெல் கையிருப்புத் தொகையின் அளவு எவ்வளவு என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-28

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks