01

E   |   සි   |  

 திகதி: 2017-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1560/2017: "கமட்ட சவிய - சதொச படிய" நிகழ்ச்சித்திட்டம்: செலவு

 

கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "கமட்ட சவிய - சதொச படிய" நடமாடும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் தற்போது அமுலில் உள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதி யாது என்பதையும்;

(iv) இதற்காக ஏற்கப்பட்ட மொத்தச் செலவு பற்றிய அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) மேற்படி கருத்திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் உரியவாறான சாத்தியக்கூறுக் கற்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(vi) இன்றேல், கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் தேவை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-09

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-08-08

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks