01

E   |   සි   |  

 திகதி: 2017-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1263/2017: வடக்கு புகையிரத பாதை: விபரம்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யாழ்ப்பாணம் வரை செல்கின்ற வடக்கு புகையிரத பாதை அமைக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;

(ii) 1983 ஆம் ஆண்டளவில் யாழ்தேவி புகையிரதம் வடக்கு புகையிரத பாதையில் நாளொன்றில் எத்தனை தடவைகள் சென்றுள்ளதென்பதையும்;

(iii) 1983 ஆம் ஆண்டளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையும் வருடாந்தம் பயணித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) 1980 முதல் 1983 ஆம் ஆண்டு வரை பெற்ற வருடாந்த வருமானம் ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(v) புகையிரதப் பாதை பயங்கரவாதத் தாக்குதலால் அழிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(vi) தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் யாதென்பதையும்;

(vii) ஏற்பட்ட அழிவு எவ்வளவென்பது கணிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(viii) ஆமெனில், அது எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு புகையிரத பாதையை புனரமைக்க ஒவ்வொரு ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) தற்போது எத்தனை தடவைகள் செல்கின்றதென்பதையும்;

(iii) 2009 முதல் இற்றைவரை ஒவ்வொரு வருடத்திலும் பயணித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி (iii) இல் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வருடத்திலும் பெற்றுக்கொண்டுள்ள வருமானம் எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-07

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-07

பதில் அளித்தார்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks