01

E   |   සි   |  

 திகதி: 2016-06-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0656/2016: complaints to SIU against present and former politicians of all levels

656/’16 கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) 2015.01.08 ஆந் திகதி தொடக்கம் இன்று வரையான கால எல்லையில் முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு, மற்றும் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக விசேட புலனாய்வுப் பிரிவுக்கு (SIU) கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு; (ii) மேற்படி (i) இன் பிரகாரம் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் பெயர்களை சபையில் சமர்ப்பிப்பாரா; (iii) விசேட புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநாகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு; (iv) இப்புலனாய்வுகளின் முன்னேற்றம் தனத்தனியாக யாது; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks