01

E   |   සි   |  

 திகதி: 2016-02-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0301/2016: மசகு எண்ணெய் மற்றும் பெற்றோல் கொள்வனவு: உலக சந்தை விலை

301/’15

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     உலக சந்தையிலிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் உள்நாட்டு சந்தையில் நுகர்வோருக்கு விற்கப்படும் வரை செலவாகும் காலம் எவ்வளவு;

(ii) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 2014 நவெம்பர் மாதத்திலும் 2015 ஆகஸ்ட்  மாதத்திலும் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்ட மாதாந்த சராசரி விலை எவ்வளவு;

(iii) உலக சந்தையிலிருந்து பெற்றோல் கொள்வனவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் உள்நாட்டு சந்தையில் நுகர்வோருக்கு விற்கப்படும் வரை செலவாகும் காலம் எவ்வளவு;

(iv) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 2014 திசெம்பர் மாதத்திலும் 2015 செத்தெம்பர் மாதத்திலும் பெற்றோல் கொள்வனவு செய்யப்பட்ட மாதாந்த சராசரி விலை எவ்வளவு;

(v) 2015 சனவரி 09 ஆம் திகதி  மற்றும் 2015 ஒற்றோபர் 09 ஆம் திகதியில் இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் சில்லறை விலை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) உலக சந்தையில் பெற்றோலிய​ விலை வீழ்ச்சியடைவதன் நன்மை நுகர்​வோருக்கு வழங்கப்படாதது ஏனென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-26

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-26

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks