பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
178/ '15
கௌரவ (டாக்டர்) ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திரு. எம்.எம்.ஏ. நிப்ரான் மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் வசித்த திக்வெல்ல, யோனகபுர, வெதகெதர, 264/1 ஆம் இலக்க வீடு மலைசார்ந்த பிரதேசத்தில் அமைந்திருந்தது என்பதையும்;
(ii) 2012.09.22ஆம் திகதி பெய்த மழையின் காரணமாக உடைந்து சேதமான இந்த வீட்டில் எஞ்சியிருந்த சமையலறையும் 2015.09.02 ஆம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் அருகாமையில் இருந்த மண்மேடு சரிவுக்குள்ளானமையால் முழுமையாக அழிவடைந்துள்ளது என்பதையும்;
(iii) இது தொடர்பில் பிரதேசத்தின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) சிறு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு இருந்த மேற்படி வீடு முழுமையாக உடைந்து சேதமடைந்ததன் மூலமும் நிரந்தர வாழ்வாதாரம் இன்மையாலும் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ள திரு. நிப்ரானுக்கு மேற்படி வீட்டை கட்டிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-21
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks