01

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0080/2015: புதைபொருட்கள் அழிக்கப்பட்டமை : சட்ட நடவடிக்கை

80/ '15

கௌரவ சந்திம கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) சுமார் கடந்த ஒரு தசாப்த காலமாக தொல்பொருட்கள் மற்றும் புதைபொருட்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளமை மற்றும் திருடர்கள் கைப்பற்றியுள்ளமை பற்றி பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?

(ஆ) (i) இது தொடர்பாக தொல்பொருளியல் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக தொல்பொருளியல் திணைக்களம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;

(iv) மேற்படி சட்ட நடவடிக்கைகள் மூலம் தவறாளிகளாக்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(v) இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாதிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks