01

E   |   සි   |  

 திகதி: 2014-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

5360/2014: Resettlement of Thayiddy and Valikamam residents

5360/ ’14

கௌரவ அ. விநாயகமூர்த்தி,—  மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தையிட்டியிலிருந்த மூவாயிரம் (3000) மக்களும்    மயிலிட்டியிலிருந்த ஐயாயிரம் (5000) மக்களும்  இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை என்பதையும்;

(ii) கடந்த 20 வருடங்களாக குறிப்பிட்ட அம்மக்கள் இன்னும் முகாம்களில்தான்  இருக்கிறார்கள் என்பதையும்;

(iii) இலங்கை இராணுவம் இவர்களை மீள்குடியேற விடுவதில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட மக்கள் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் என்பதையும்;

(ii) இவர்களை மீள்குடியேற   இடமளிக்கும்படி  இலங்கை இராணுவத்திற்கு  பணிப்புரை விடுக்கப்படுமா என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-26

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks