01

E   |   සි   |  

 திகதி: 2014-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

4904/2014: வெலிசற, இலங்கை கடற்படை ஆஸ்பத்திரி: கதிர்வீச்சு இயந்திரம்

4904/ ’14

கௌரவ அஜித் மான்னபெரும,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2013 ஆம் ஆண்டில் வெலிசர, இலங்கை கடற்படை ஆஸ்பத்திரிக்கு யப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட கதிர்வீச்சு இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டதா என்பதையும்;

(ii) ஆமெனின், மேற்படி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) இதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) இதனை இறக்குமதி செய்த நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;

(v) மேற்படி இயந்திரத்தை கடற்படை ஆஸ்பத்திரி பொறுப்பேற்பதற்கு முன்னர் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தி அங்கீகாரம் பெற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனின், மேற்படி அங்கீகாரத்தை வழங்கியவர்களின் பெயர், பதவிகள் யாவை என்பதையும்;

(vii) கதிர்வீச்சு இயந்திரம் மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடற்படை குறிப்பிட்ட நிறுவனத்துடன் உத்தரவாதமளிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருந்ததா என்பதையும்;

(viii) ஆமெனின், மேற்படி உத்தரவாத காலகட்டம் யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது மேலே குறிப்பிடப்பட்ட இயந்திரம் இயங்கும் நிலையில் காணப்படுகின்றதா என்பதையும்;

(ii) இன்றேல் அது செயலிழந்த திகதி யாதென்பதையும்;

(iii) மேற்படி இயந்திரம் உத்தரவாத காலத்தினுள் செயலிழந்திருப்பின், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊடாக இதனை இலவசமாக திருத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி இயந்திரத்தைக் கொள்வனவு செய்கின்றபோது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா;

(ii) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-07-24

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks