01

E   |   සි   |  

 திகதி: 2014-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

4807/2014: தமிழ் மொழிமூல பாடசாலையைத் தாபித்தல்: உக்குவெல நகரம்

4807/ ’14

கௌரவ (அல்ஹாஜ்) ஏ. எச். எம். அஸ்வர்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      உக்குவெல நகரம் மற்றும் சுற்றிலுமுள்ள பகுதிகளில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு உயர் தரம் வரை கல்வி கற்பதற்கான தமிழ் மொழிமூல பாடசாலையொன்று இல்லை என்பதையும்;

(ii) அண்ணளவாக 700 இற்கும் மேற்பட்ட தமிழ் மாணவ மாணவிகள் கல்வி கற்கக் கூடிய பாடசாலையொன்றை அமைக்கத் தேவையான காணியை வழங்க பெற்றோர் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) உக்குவெல நகரம் மற்றும் அதையண்டிய தோட்டப் பிரதேசங்களில் வாழும் தமிழ் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-09

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      උකුවෙල නගරය සහ අවට ප්‍රදේශවල  ජීවත් වන ද්‍රවිඩ දරුවන්ට උසස් පෙළ  අධ්‍යාපනය ලැබීමට ද්‍රවිඩ මාධ්‍ය  පාසල් ආසන්නයේ පිහිටා ඇත. විස්තර පහත සඳහන් පරිදි වේ.

නම

දුර (km) (උකුවෙල නගරයේ සිට)

පාසල් වර්ගය

මා/අජ්මීර් ජාතික පාසල

උකුවෙල නගරයේ

1AB

මා/කුරිවෙල හමිදියා මු.වි.

2.5

1C

 

 

 

              (ii)      එවැනි දැන්වීමක් සිදු කර නොමැති බව මධ්‍යම පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ විසින් දන්වා ඇත.

(ආ) මෙම ප්‍රදේශයේ ද්‍රවිඩ සිසුන් ඉහත සඳහන් කළ පාසල්වල උසස් අධ්‍යාපනය ලබන බැවින් නව පාසලක් ස්ථාපිත කිරීමේ ඉල්ලීමක් ලැබී නැත.

මෙම ප්‍රදේශයේ උසස් පෙළ ඉගෙනුම ලබන සිසුන් ඉහත සඳහන් කළ දෙමළ මාධ්‍ය පාසල්වල දැනට ඉගෙන ගන්නා බව  වැඩිදුරටත් සඳහන් කරමි.

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2016-07-09

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks