01

E   |   සි   |  

 திகதி: 2014-10-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

4674/2014: Sri Lanka Drugs Corporation - production of drugs

4674/ ’13

கௌரவ பி. ஹரிசன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கடந்த மூன்று வருடங்களில் உற்பத்தி செய்த ஔடத வகைகளின் பெறுமதி வருடாந்தம் தனித்தனியாக எவ்வளவு;

           (ii)     அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஔடதங்கள் தனியார்துறை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகின்றனவா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒளடத வகைகள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமாயுள்ளதா;

(ii) இன்றேல், அத்தகைய உற்பத்தியை மேற்கொள்வதில் நிலவுகின்ற தடைகள் யாவை;

(iii) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உற்பத்தி செய்கின்ற ஔடத வகைகள் (ஏற்புடைய மருந்தளவுகளுடன்) இறக்குமதி செய்யப்படுகின்றனவா

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) வெளிநாட்டுக் கம்பனிகள் மூலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற ஔடத வகைகளின் தரம் பரிசோதிக்கப்படுகின்றதா;

(ii) ஔடதங்களுக்கான கொள்வனவுக் கட்டளை விடுத்தல் தரப் பரிசோதனையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றதா;

(iii) அத்துடன் வெளிநாட்டு ஔடத உற்பத்திக் கம்பனிகளின் தரச்சான்றிதழை பரிசோதனை செய்தல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றதா

என்பதை அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-30

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-10-30

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks