01

E   |   සි   |  

 திகதி: 2014-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

4641/2014: Kidney Disease - Ministerial Subcomittee

4641/ ’13

கௌரவ பி. ஹரிசன்,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சிறுநீரக நோய் பற்றிய விதப்புரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 2012 நவம்பர் மாதம் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டதா;

           (ii)    அக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை யாது;

(iii) அவ்வமைச்சர்களின் பெயர்கள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிட்ட அமைச்சரவை உபகுழுவினால் புலமைசாலிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டதா;

(ii) ஆமெனில், அத்திகதி யாது;

(iii) மேற்படி புலமைசாலிகள் குழுவினால் சிறுநீரக நோயைத் தடுப்பதற்காகவும் நோயாளர்கைளைப் பராமரிப்பதற்காகவும் முன்வைக்கப்பட்ட விதப்புரைகள் யாவை;

(iv) அவ்விதப்புரைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா;

(v) ஆமெனில் அவ்விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-23

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks