01

E   |   සි   |  

 திகதி: 2014-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

4623/2014: Russian Embassy - Takeover of private lands

4623/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்க,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ரஷ்ய தூதரகத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை தனியார் காணியொன்றை சுவீகரித்துள்ளதா என்பதையும்;

           (ii)     மேற்படி சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;

(iii) ரஷ்ய தூதரகத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள காணியின் மொத்த பரப்பளவு எவ்வளவென்பதையும்;

(iv) தனியார் காணியொன்றை சுவீகரித்து வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்தலானது நாகரீகமானதொரு செயலாகுமா என்பதையும்;

(v) சுவீகரிக்கப்பட்ட காணிகளை, நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் பொதுப் பணியொன்றுக்காகவன்றி வேறொரு பணிக்காகப் பயன்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி காணி சுவீகரிக்கப்பட்டதன் பின்னர் இக்காணிகளில் வசித்தவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks