01

E   |   සි   |  

 திகதி: 2013-12-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4417/2013: மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டம் : வினைத்திறன்

4417/ ’13

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,—  வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டத்தின் ஆரம்ப திட்டத்திற்கு உரித்தானதாக இருந்த டெவோன், சென்ட் அன்ட்ரூஸ், பூண்டுலு ஓயா, பூனா ஓயா மற்றும் ரம்பொட ஆகிய நீர் மூலங்கள், வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மேற்படி கருத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) இந்நிலைமையின் கீழ் ஆரம்ப திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான மின் உற்பத்தியை, மேற்படி நீர் மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்க முடியுமா என்பதையும்;

(iii) எதிர்காலத்தில் இவ்வனைத்து நீர் மூலங்களையும் அல்லது அவற்றில் ஒரு பகுதியை, வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மேற்படி நீர் மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டத்தின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதற்கு  எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;

(iv) ஆமெனில், அவ்வாறு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற நீர் மூலங்கள் யாவை என்பதையும்;

(v) தேவைகளுக்கு அமைய மேற்படி நீர் மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டத்துடன் ஒன்றிணைக்கக்கூடியவாறு மேற்படி நீர் மூலங்களில் அவசியமான நிர்மாணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-20

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)       ඔව්, ඉහළ කොත්මලේ ජල විදුලි බලාගාර ව්‍යාපෘතියේ මූලික සැලසුමට අනුව කොත්මලේ ඔය ප්‍රධාන ජල මූලාශ්‍රයට අමතරව, ඩෙවොන්, සෙන්ට් ඇන්ඩෲස්, පූඩළු ඔය, පූනා ඔය සහ රම්බොඩ ඔය යන ජල මූලාශ්‍රයන්ද යොදා ගැනීමට සැලසුම් කර තිබුණු නමුදු පසුව ගන්නා ලද කැබිනට් තීරණයක් අනුව, කොත්මලේ ඔය ප්‍රධාන ජල මූලාශ්‍රය පමණක් යොදා මෙම ව්‍යාපෘතියේ මුල් අදියර ක්‍රියාත්මක කිරීමට කටයුතු කර ඇත.

(ii) මුල් සැලැස්ම අනුව අපේක්ෂිත වාර්ෂික විදුලිය නිෂ්පාදනය ගිගා වොට් පැය 525කි. පසුව කළ සංශෝධනය අනුව අපේක්ෂිත විදුලිය නිෂ්පාදනය ගිගා වොට් පැය 409කි.

(iii) දැනට සලකා බලමින් පවතී.

(iv) මේ වන විට පූඩළු ඔය සහ ඩැන්සිනන් ඔය ජල මූලාශ්‍ර යොදා ගැනීම පිළිබඳව විමර්ශනය කර ඇති අතර, ඒ සඳහා මූල්‍යමය ප්‍රතිපාදන ලබා ගැනීම සඳහා විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුව වෙත ඉල්ලුම් කර ඇත.

(v) ඔව්.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2013-12-20

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks