01

E   |   සි   |  

 திகதி: 2014-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

4335/2014: இலங்கை நிருவாக சேவை : நியமனங்கள்

4335/ ’13

கௌரவ (திருமதி) அனோமா கமகே,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தற்போது இலங்கை நிருவாக சேவையின் வகுப்பு I, II, மற்றும் III இல் காணப்படுகின்ற பதவி வெற்றிடங்கள் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

           (ii)     இலங்கை நிருவாக சேவையின் வகுப்பு III இற்கு அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்படுகின்ற திறந்த போட்டிப் பரீட்சை இறுதியாக நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iii) மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அலுவலர்கள் தெரிவு செய்து நியமிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iv) அச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்ட நியமனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(v) மேற்படி நியமனங்களைப் பெற்ற அலுவலர்களிடையே காணப்பட்ட பெண் அலுவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கை நிருவாக சேவையின் வகுப்பு III இற்கு அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை இறுதியாக நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அலுவலர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதையும்;

(iii) இன்றேல், அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதிகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-19

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-19

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks