01

E   |   සි   |  

 திகதி: 2014-05-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

4327/2014: கடற் பாதுகாப்புத் தொழிலில் ஈடுபடுதல் : உரிமை

4327/ ’13

கௌரவ அஜித் பி. பெரேரா,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கையில் எந்தவொரு பிரசைக்கும் கடற் பாதுகாப்புத் (Sea Marshals) தொழிலில் ஈடுபடும் உரிமை உள்ளதா என்பதையும்;

(ii) கடற் பாதுகாப்புத் தொழிலில் ஈடுபடுவதற்காக ‘ரக்னா ஆரக்ஷன லங்கா லிமிடட்’ ஊழியர்களுக்கு மாத்திரம் உரிமையுள்ளதெனக் கூறுகின்ற கடிதமொன்று 2013.06.18ஆம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. டி. எம். எஸ். டி. ஜயரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், குறித்த கடிதம் மூலம் அரசியலமைப்பின் 14(1)(எ) உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு சட்டமுறையான தொழிலில் அல்லது உயர்தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவொரு பிரசைக்குமுள்ள இயலுமை இழக்கச்செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-09

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-05-09

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks