01

E   |   සි   |  

 திகதி: 2014-03-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

4216/2014: மகாவலி அதிகாரசபை ஊழியர்களுக்குக் காணி வழங்குதல்: விபரம்

4216/ ’13

கெளரவ திஸ்ஸ அத்தனாயக்க,— நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை மகாவலி அதிகாரசபையில் 15 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு காணிக் கச்சேரியொன்றை நடாத்தி காணி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறான காணிக் கச்சேரியொன்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பின், அத் திகதி யாதென்பதையும்;

(iii) இதன் பிரகாரம் முன்வந்துள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) தற்போது காணி பெறுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பின், இவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள காணிகளில் மேற்படி ஊழியர்களுக்கு காணி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி அதிகாரசபை ஊழியர்களிடமிருந்து காணி வழங்குவதற்காக ஏதேனுமொரு பணத் தொகை அறவிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி கட்டணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி கட்டணத் தொகையை செலுத்தியுள்ள ஆட்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(v) தற்போது பணத்தில் ஒரு பகுதியைச் செலுத்தியுள்ள ஊழியர்களுக்கு காணி வழங்கப்படும் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-18

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-05-07

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks