01

E   |   සි   |  

 திகதி: 2014-03-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

4094/2014: Sri Lankan Airlines Ltd - Purchase of new aircrafts

4094/ ’13

கெளரவ அனுர திசாநாயக்க,— சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2013 ஆம் ஆண்டில் வ/ப ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தினால் யாதேனுமொரு வகை விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி விமானக் கொள்வனவு அல்லது குத்தகைக்கு பெறுதல் தொடர்பில் பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;

(iii) கொள்வனவுகள் அல்லது குத்தகை அடிப்படையிலான பெறுகைகள் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பின், அதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்கள் மற்றும் விலைகள் யாவையென்பதையும்;

(iv) விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(v) மேற்படி நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட விமானக் கொள்வனவு அல்லது குத்தகை அடிப்படையிலான பெறுகைகள் சார்பில் செலவிடப்பட்ட மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) அப் பணத் தொகை எவ்வாறு பெறப்பட்டதென்பதையும்;

(iii) மேற்படி பணத் தொகை கடனாகப் பெறப்பட்டிருப்பின், கடன்   தொகையின் அளவுகள், வட்டி வீதங்கள் மற்றும் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-05

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-05

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks