01

E   |   සි   |  

 திகதி: 2013-10-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3696/2013: விமான நிலைய, விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) லிமிரெட் : 'ரிவிர' பத்திரிகை விளம்பரம்

3696/ ’13

கெளரவ அனுர திசாநாயக்க,— சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     வரையறுக்கப்பட்ட விமானநிலைய, விமானசேவைகள் (ஸ்ரீ லங்கா) கம்பனியின் மூலம் 2013.03.06 ஆம் திகதியன்று ரிவிர பத்திரிகையில் விளம்பரமொன்று பிரசுரிக்கப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி விளம்பரம் பிரசுரிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

(iii) மேற்படி விளம்பரத்துக்கு இக் கம்பனியினால் செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி பணத் தொகை எந்த செலவுத் தலைப்பின் கீழ் செலவிடப்பட்டதென்பதையும்;

(v) ஏதேனுமொரு அரசியல் கட்சியின், ஏதேனுமொரு பதவிக்கு எவரேனுமொரு நபர் நியமிக்கப்படும் போது அதற்கேற்புடையதாக வரையறுக்கப்பட்ட விமானநிலைய, விமானசேவைகள் (ஸ்ரீலங்கா) கம்பனியினால் விளம்பரங்களை பிரசுரிக்க முடியுமா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-11

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks