01

E   |   සි   |  

 திகதி: 2013-11-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3687/2013: Volleyball Association Chairman

3687/ ’13

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ)    இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் கரப்பந்தாட்டத்தின் மேம்பாட்டுக்காக, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 2012/2013 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள பணத் தொகைகள் தனித்தனியே எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வெளிநாடு செல்கின்ற இலங்கை ஊழியர்களிடமிருந்து அறவிடப்படுகின்ற பணத்திலிருந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பிரதானமாக வருமானம் பெறுகின்றது என்பதையும்;

(ii) கஷ்டங்கள், துன்புறுத்தல்களுக்கு ஆளான இலங்கை ஊழியர்கள் பெருந்தொகையானோர் மத்திய கிழக்கு நாடுகளில் தடுப்பு முகாம்களில் கஷ்டப்பட்டுவருகின்றபோது, அவர்களை விடுவித்து துரிதமாக இலங்கைக்கு அழைத்துவருவதற்கு முன்னுரிமை வழங்காது, அப்பணத்தை கரப்பந்தாட்டம் போன்ற வேறு நோக்கங்களுக்கு செலவிடுவது அநீதியாகும் என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-22

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-05

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks