01

E   |   සි   |  

 திகதி: 2013-09-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3621/2013: மொரட்டுவ த சொய்ஸா விளையாட்டரங்கு :மறுசீரமைப்பு

3621/ ’13

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     சர்வதேச விளையாட்டரங்கு மைதானமொன்றான மொரட்டுவ த சொய்ஸா விளையாட்டு அரங்கில் இறுதியாக சர்வதேச விளையாட்டுப் போட்டியொன்று நடத்தப்பட்ட வருடம் மற்றும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி விளையாட்டரங்கு சிதைவடையும் நிலைமைக்கு உள்ளாவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) அதன் நிருவாகம் ஒப்படைக்கப்பட்டுள்ள தரப்பு யாதென்பதையும்;

(iii) அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனம் அல்லது தரப்பு யாதென்பதையும்;

(v) இதற்காக மதிப்பிடப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks