01

E   |   සි   |  

 திகதி: 2013-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3524/2013: Housing Scheme-Koggala

3524/ ’13

கௌரவ புத்திக பதிரண,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கொக்கல விமானப்படை  முகாமருகில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமான வீடமைப்புத் தொகுதியொன்று அமைந்துள்ளதென்பதை அறிவாரா;

(ii) மேற்படி வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை யாது;

(iii) அவ்வீடமைப்புக் கருத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை யாது;

(iv) அதற்கான நிதியங்கள் பெறப்பட்ட மூலங்கள் யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இன்றளவில் மேற்படி வீட்மைப்புத் தொகுதியில் குடியமர்வதற்காக வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி கருத்திட்டம் இற்றைவரை பொதுமக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டிராவிடின் அது தேசிய செல்வத்தை நாசமாக்குவதாகும் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

(iii) ஆமெனில், சுற்றுலாக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக அல்லது வேறேதேனும் பயனுறுதிமிக்க நடவடிக்கைக்காக அவ்வீடமைப்புக் கருத்திட்டத்தை ஈடுபடுத்த திட்டமிடுவாரா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-05

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks