01

E   |   සි   |  

 திகதி: 2013-07-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

3514/2013: Govt Land - Thibbotumulla

3514/ ’13

கெளரவ வசந்த அலுவிஹாரே,—  சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவின் ஆளுகைப் பிரதேசத்திற்குரிய திப்படுமுல்லைக் கிராமத்தில் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு காணி உள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான மேலே குறிப்பிட்ட காணியின்,

(i) முழு நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;

(ii) பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;

(iii) பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிரப்பரப்பு எவ்வளவென்பதையும்;

(iv) பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ள சிறு ஏற்றுமதிப் பயிர்களிலிருந்து பெறப்படும் இலாபம் அல்லது நட்டம் யாதென்பதையும்;

(v) ஏனைய வளங்களிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபம் அல்லது நட்டம் யாதென்பதையும்;

(vi) பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(vii) வருடாந்த மொத்த இலாபம் அல்லது நட்டம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான மேலே குறிப்பிட்டுள்ள காணியைத் தற்போது ஒரு குழுவினர் கைப்பற்றிக் கொண்டுள்ளனரா என்பதையும்;

(ii) இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பின் அது எவ்வடிப்படையில் என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-12

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks