01

E   |   සි   |  

 திகதி: 2012-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

2867/2012: Mr. Abdul Ramees

2867/ ’12

கெளரவ எம். ரீ. ஹசன் அலி,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன மதஅலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      1996.09.27 ஆம் திகதி அல்லது அண்மித்த ஒரு திகதியில் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு பொலிஸ் பாதுகாப்புச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கையில், பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட, கல்முனை பொலிசுக்கு இணைக்கப்பட்டிருந்த ஊர்காவற் படை வீரரான, திரு. அப்துல் ரமீசு (9913) சார்பில் நட்டஈட்டுத் தொகை மற்றும் ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லையென்பதையும்;

(ii) இது தொடர்பில் கல்முனை பொலிஸாரின்  ஓ.டபிள்யு/3037/11 ஆம் இலக்க 2011.04.22 ஆம் திகதிய கடிதம் மற்றும், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகரின்  எஸ்.ஏ.2/எச்.ஜீ/10/2011ஆம் இலக்க 2011.04.20 ஆம் திகதிய கடிதத்தின் மூலம்,  இங்கினியாகலை சிவில் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அறிவித்துள்ளபோதிலும், இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) கொலை செய்யப்பட்ட திருமணமாகாதவரான திரு. அப்துல் ரமீஸின் வயோதிப பெற்றோரான எம்.ஏ. அப்துல் அஸீஸ் மற்றும் யூ.எல். ஆசியா உம்மா ஆகியோருக்கு, குறித்த நட்டஈட்டுத் தொகையினையும், ஓய்வூதியத்தையும் தாமதமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks