01

E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1298/2025: Receipt of revenue by foreign employees from year 2020

1298/2025
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களால் அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் அளவு மற்றும் அவ்வாறு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியின் அளவானது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் வீதமாக ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக கிராக்கி நிலவும் நாடுகள் யாவையென்பதையும்;
(iii) அத்தேவையைப் பூர்த்திச் செய்வதற்கு அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
(iv) மேலே (ii) இல் குறிப்பிட்ட நாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை தொழில்வாய்ப்புகளுக்காக சென்றுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(v) இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக நன்மை பயக்கும் ஊழியச் சந்தை காணப்படுகின்ற நாடுகள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி நாடுகளுக்கு அதிக தேர்ச்சிமிக்க இலங்கைத் தொழிலாளர்களை அனுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks