பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1221/2025
கௌரவ சுரங்க ரத்னாயக்க,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கலாவெவ புகையிரத நிலையம், இலங்கையின் மிகப் பழைமையானதொரு புகையிரத நிலையம் என்பதையும்;
(ii) கலாவெவ வாவி, அவுக்கண புத்தர் சிலை, கடவர கோவில், விஜித்தபுர ரஜ மஹா விஹாரை, துட்டகைமுனு மஹா விஹாரை மற்றும் சாமரகல ரஜ மஹா விஹாரை போன்ற பிரசித்திப்பெற்ற இடங்களைப் பார்வையிடுவதற்கு வருகைத் தருகின்ற பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மேற்படி புகையிரத நிலையத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதையும்;
(iii) ஆயினும், அங்கு புகையிரத ஆசனப் பதிவு வசதிகள் காணப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆமெனில், மேற்படி புகையிரத நிலையத்துக்கு ஆசனப் பதிவு வசதிகளை வழங்க முடியுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த வசதிகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
(iii) மேற்படி புகையிரத நிலையத்துக்கு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரமொன்றை (A.T.M) வழங்க முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-10
கேட்டவர்
கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-11-10
பதில் அளித்தார்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks