E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1220/ 2025 - கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1220/2025
      கௌரவ சுரங்க ரத்நாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) ஹொரோவ்பதான யானைகள் தடுப்பு மத்திய நிலையத்தில் இன்றளவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) மேற்படி நிலையத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பு எத்தனை ஏக்கர் என்பதையும்;
      (iii) அந்த வளாகத்தில் இருந்த பயிர்ச் செய்கை நிலங்களின் அளவு எத்தனை ஏக்கர் என்பதையும்;
      (iv) அந்தக் காணிகளுக்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று பயிர்ச் செய்கை நிலங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி மத்திய நிலையம் யானைகளின் வழித்தடமொன்றில் அமைத்துள்ளதால், அதனூடாக பயணிக்கும் காட்டு யானைகளுக்கு மாற்று வழிகள் இன்றி, அவை வேறு பயிர்ச் செய்கை நிலங்களூடாகச் செல்வதனால் பயிர் சேதங்கள் ஏற்படுவதை அறிவாரா என்பதையும்;
      (ii) அதற்காக வழங்கப்படும் தீர்வுகள் யாவை என்பதையும்;
      (iii) காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக இழப்பீடு வழங்க எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;
      (iv) தமது காணிகளுக்கான உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரம் இல்லாத விவசாயிகளுக்கு பயிர்சேதங்களுக்கான இழப்பீடு செலுத்தப்படாதா என்பதையும்;
      (v) ஆமெனில், அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் விதம் யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks