E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1174/ 2025 - கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1174/2025
      கௌரவ சுனில் ரத்னசிரி,— பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையிலுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் மொத்த எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
      (iii) இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவி வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iv) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      (v) ஆமெனில், ஒவ்வொரு பதவி வாரியாக மேற்படி வெற்றிடங்களை நிரப்பும் திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) 2024 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் செயற்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
      (ii) இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) ஆமெனில், அம்முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks