பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
901/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகங்களின் எண்ணிக்கை யாது;
(ii) அவற்றில் போதுமானளவு ஊழியர்கள் உள்ளனரா;
(iii) அவ்வலுவலகங்களுக்குத் தேவைப்படும் பொறியியலாளர்களின் எண்ணிக்கை யாது;
(iv) மேற்படி எண்ணிக்கையிலான பொறியியலாளர்கள் உள்ளனரா;
(v) இன்றேல், பொறியியலாளர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது;
(vi) புதிய பொறியியலாளர்கள் ஆட்சேர்த்துக் கொள்ளப்படுவார்களா;
(vii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மூலங்கள் யாவை;
(ii) இன்றளவில் மேற்படி ஒவ்வொரு மூலத்திலிருந்தும் உற்பத்திச் செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) இலங்கை மின்சார சபை தனியார்மயப்படுத்தப்படுமா;
(iv) ஆமெனில், அதன் ஊழியர்கள் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) சபையின் கீழுள்ள கம்பெனிகளில் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலோபாய நிகழ்ச்சித் திட்டங்கள் / கருத்திட்டங்கள் யாவை;
(ii) இன்றளவில் மேற்படி ஒவ்வொரு கம்பெனியிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) மேற்படி கம்பெனிகளில் ஊழியர் மிகை காணப்படுகின்றதா;
(iv) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு கம்பெனியிலும் காணப்படும் ஊழியர் மிகை வெவ்வேறாக யாது;
(v) இலங்கை மின்சாரக் கம்பெனியால் எப்பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது;
என்பதையும் அவர் மேலும் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-12
கேட்டவர்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks