01

E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0713/2025: சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் : களுத்துறை மாவட்டம்

----

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)  (i)      சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை 43,984 ஆகும்.

          (ii)     2024ஆம் ஆண்டில் களுத்துறை மாவட்டத்தில்,

  • சிறுதேயிலைத் தோட்டத்துறையில் தேயிலை உற்பத்தி: முடிவுத் தேயிலை 15,514 மில்லியன் கிலோகிராம்
  • சிறு தேயிலைத் தோட்டத்துறையில் மொத்தத் தேசிய தேயிலை உற்பத்தி: முடிவுத் தேயிலை 197,157 மில்லியன் கிலோகிராம்
  • அதன்படி, களுத்துறை மாவட்டத்திலுள்ள சிறு தேயிலைத் தோட்டத்துறை தேயிலை உற்பத்தியில் பங்களிப்பு: 7.86% ஆகும்.

(iii) அச்சங்கங்களின் எண்ணிக்கை 120 ஆகும்.

(iv) சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

  • சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் களின் நலன்புரிக்காக தேயிலைச் சக்தி காப்பீட்டு நன்மைத் திட்டத்தின்கீழ், சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கத்தில் உறுப்பினர் களாகவுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமை யாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நன்மை களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், 2,400 ரூபாயை தேயிலைச் சக்தி காப்புறுதி நலன் நிதியத்தில் வைப்புச்செய்து, முழுமை யான அங்கத்துவத் தைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அங்கத்துவத்தைப் பெற்றுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமை யாளர்களுக்குப் பின்வரும் சலுகைகளைப் பெறுவதற்கான உரிமை உண்டு.
  • மூளை / சிறுநீரகம்/ இதய அறுவை சிகிச்சை களுக்கு
  • முழுக்கால மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு உடலுறுப்பு செயலிழப்புக்காக
  • திடீர் விபத்துக்களால் ஏற்பட்ட மரணங் களுக்கு
  • இயற்கை மரணங்களுக்கு

(ஆ) (i) ஆம்.

(ii) சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கங்களுக்கு அங்கத்தவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை

  • சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்க யாப்பின்படி, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கத்தை நிறுவும் ஆரம்பக் கூட்டத்தில் பங்கேற்கின்ற அனைத்துத் தகுதிவாய்ந்த நபர்களுக்கும் அங்கத்துவம் உரித்தாகும்.
  • சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்க யாப்பின்படி, தகுதியுடைய சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராவதற்கான விண்ணப்பப் படிவத் தைப் பூர்த்திசெய்து, சங்கச் செயலாளர்மூலம் பொதுச் சபையில் சமர்ப்பித்து, பொதுச் சபையின் அங்கீகாரத்தைப் பெறுகின்றவர் களுக்கு அங்கத்துவம் உரித்தாகின்றது.

சிறு தேயிலைத்தோட்ட அபிவிருத்திச் சங்கத்தின் உத்தியோகத்தர் தெரிவுக்கான நடைமுறை

  • சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கங்கள் 2018ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத் தொடரின் 19ஆம் பிரிவின் 19.1(அ), (ஆ), (இ), (ஈ)ஆம் பந்திகளின்படி தெரிவுசெய்யப்படுவார்கள்.

(iii) ஆம். அது பின்வருமாறு:

  • சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கங்களுக்கு உறுப்பினர்களை ஆட் சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை
  • ·சங்கத்தின் அதிகார பிரதேச வரம்புக்குள் இருக்கும் 18 வயதுக்குக் குறையாத சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக இருத்தல் வேண்டும்.
  • ·குறித்த ஆண்டில் அதிகாரப் பிரதேச எல்லைக்குள் புதிதாகத் தேயிலைச் செய்கைக்கான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
  • ·புதிதாக நிறுவப்பட்ட சங்கமொன்றுக்கு அன்றையதினம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்திசெய்துள்ள அனைவருக்கும் சங்கத்தில் அங்கத்துவத்தைப் பெறமுடியும்.
  • அதிகாரப் பிரதேச எல்லைக்குள் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்க மொன்று ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், அந்தச் சங்கத்தின் செயலாளரிடமிருந்து அதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சங்கத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • அந்த விண்ணப்பப்படிவத்தைப் பொதுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து, முன் மொழிவுகள் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கத்துவத்தைப் பெறமுடியும்.
  • வருடாந்த அங்கத்துவத் தொகை  240  ரூபாய் ஆகும். அத்தொகை முதலாம் காலாண்டுக்குள் செலுத்தப்படல் வேண்டும்.
  • முதலாம் காலாண்டில் அங்கத்துவப் பணத் தைச் செலுத்தாவிடின், சங்க அங்கத்துவம் இடைநிறுத்தப்படும்.

சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கத் தின் உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற் கான நடைமுறை

  • பதிவுசெய்யப்பட்ட சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கங்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
  • இரண்டு வருட பதவிக்காலம் முடிந்த பிறகு, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவரால் அனைத்துச் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கங் களையும் மறுசீரமைப்பதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
  • பிராந்திய முகாமையாளரால் சங்கங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு உரித்தான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரால் அனுப்பப்படும் அதிகாரபூர்வ அறிவிப்புக் கடிதம் அனைத்துச் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சங்கச் செயலாளர்கள் மற்றும் பிராந்திய மாவட்ட அமைப்பின் செயலாளர்கள், தேயிலை ஆய்வாளர் விரிவாக்க உத்தியோகத்தர் மற்றும் வலய தேயிலைச் சங்க விரிவாக்க உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்படும்.
  • சங்கச் செயலாளரால் தேயிலை ஆய்வாளர் விரிவாக்க உத்தியோகத்தருடன் கலந்துரை யாடி மறுசீரமைப்புக்கான திகதியைப் பெற்று, சங்கத்தின் மறுசீரமைப்புக்கான அறிவிப்புகள்/அழைப்புக் கடிதங்கள் 14 நாட்களுக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.
  • ·அதன்பிறகு, நிர்ணயிக்கப்பட்ட திகதியில் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் தேயிலை ஆய்வாளர் விரிவாக்க உத்தியோகத்தரின் தலைமையில் சங்கம் மறுசீரமைக்கப்படும்.

 (இ) ஏற்புடையதன்று.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks