01

E   |   සි   |  

 திகதி: 2025-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0637/2025: 2015 முதல் மீன் அறுவடை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி: விபரம்

----

கேட்கப்பட்ட திகதி

2025-07-09

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)        (i)

கடல் மீன் உற்பத்தி (மெற்றிக்தொன்களில்)

வருடம்

கரையோர பிராந்தியம்

ஆழ்கடல்/ கரைக்கு அப்பால்

அனைத்து கடல் மீன் உற்பத்தி

நன்னீர் மற்றும் நீர்வாழின உற்பத்தி

அனைத்து மீன் உற்பத்தி

2015

269,020

183,870

452,890

67,300

520,190

2016

274,160

182,830

456,990

73,930

530,920

2017

259,720

189,720

449,440

81,870

531,310

2018

249,020

190,350

439,370

87,690

527,060

2019

242,580

172,910

415,490

90,340

505,830

2020

182,560

144,370

326,930

101,810

428,740

2021

178,260

153,415

331,675

104,235

435,910

2022

149,440

131,170

280,610

116,620

397,230

2023

164,995

128,950

293,945

113,125

407,070

2024

165,040

143,390

308,430

102,330

410,760

2025 சனவரி - மார்ச்

49,000

42,325

  91,325

12,400

103,725

(ii)

 

வருடம்

ரூபாய்  மில்லியன்

அமெ. டொலர் மில்லியன்

2015

24,716.1

181.8

2016

26,801.6

184.1

2017

39,229.7

257.3

2018

47,948.9

295.0

2019

53,482.9

299.2

2020

39,874.0

214.9

2021

63,222.5

317.9

2022

97,242.8

302.2

2023

99,118.0

302.7

2024

86,240.9

285.2

2025 சனவரி - மார்ச்

18,247.7

61.6

       (iii)     

 

வருடம்

ரூபாய் மில்லியன்

அமெ. டொலர் மில்லியன்

2015

30,729.0

226.1

2016

35,172.0

241.6

2017

33,969.0

222.8

2018

32,726.4

201.3

2019

38,952.4

217.9

2020

35,504.3

191.4

2021

25,080.0

126.1

2022

21,664.2

70.3

2023

26,733.7

82.2

2024

36,671.7

121.6

2025 சனவரி - மார்ச்

8,500.2

28.7

 (iv)    கடல் மீன் உற்பத்தி

  • மீன்பிடித் துறைக்கான கரையோர கடல்சார் சுற்றுச்சூழல் தொகுதியில் கடல் பல்லுயிர் இனப்பெருக்கத்தை மேம்படுத்துவதற்கு கரையோரக் கடற்பரப்பில் செயற்கை அடிமூலக்கூறுகள் நிறுவப்பட்டுள்ளன. இதனூடாக மீன் இனப்பெருக்கச் சூழலை ஏற்படுத்தி கரைக்கு அருகே மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்குடன், 2021, 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தி அகற்றப்பட்ட பன்னாள் மீன்பிடிப் படகுகள், பேருந்து அடிச்சட்டத் தொகுதிகள் போன்ற மீன்களை  ஒன்றுசேர்க்கும் பொறிகள் பெருமளவு சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத் தாது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் செயற்கை அடிமூலக்கூறுகளாகத் தாபிக்கப் பட்டுள்ளன. இந்த வருடத்திலும் கொக்கல, திருகோணமலை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் இந்தச் செயற்கை அடிமூலக்கூறுகளை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • · ஆழ்கடலில் மிக ஆழமான பகுதிகளில் நீள்தூண்டல் முறையைப் பயன்படுத்தி, ‘அஸ்கெடி கெலவல்லன்’ மீன் அறுவடைக் கான முன்னோடித்திட்டம் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திலும் இந்த முன்னோடித்திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.
  • · இலங்கையில் கடனீரேரிகளில் மீன் மற்றும் இறால்களின் குடித்தொகையை அதிகரிப் பதற்கு தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையும் தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவராண்மை நிறுவனமும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் மற்றும் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற் படுத்தி வருகின்றன.
  • · கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவராண்மை நிறுவனமும் ஒருங்கிணைந்து ஆழ்கடலில் மீன்களின் குடித்தொகை குறித்த தரவுகளை மீனவ சமூகத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

நன்னீர் மீன் மற்றும் நீர் வாழின உற்பத்தி

  • · கனமழை காரணமாக வாவிகளில் நீர் நிரம்பி வழியும்போது வாவிகளின் பாதுகாப்புக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. இதன்போது மதகுகள் மற்றும் கதவுகளின் வழியாக தப்பியோடும் மீன்களின் தொகை 40% என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேறுவதைத் தடுப்பதற்கு வான்கதவுகள் மற்றும் மதகுகளுக்கு அருகிலும் வாவிகளுக்கு நீர் வரும் வழித்தடங்களிலும் தடுப்பு வலைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. (இதற்கு ஒரு வாவிக்கு அண்ணளவாக 700,000 ரூபாய் வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு வலைகளை நிறுவுவதன்மூலம் இழக்கப்படும் மீன் அறுவடையில் கணிசமான அளவைச் சேமிக்க முடியும்)

 

  • வாவிகளின் மீன் தொகையை அதிகரிப்பதற்கு மீன் குஞ்சுகள் வைப்பிடும் நடவடிக்கை கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. இது ஒழுங்கற்ற செயன்முறையாக இருந்தது. 2025ஆம் ஆண்டு தொடக்கம் வருடத்துக்கு 100க்கும் 120க்கும் இடைப்பட்ட குளங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதாந்தம் மீன் குஞ்சுகள் வைப்பிடும் நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்பட்டு, மீன் குஞ்சுகள் வைப்பிடும் செயற்பாடு முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
  • · இதன்மூலம் ஒரு வருடத்துக்கு 20,000 மெற்றிக்தொன் வீதம் அறுவடையை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு வருடாந்தம் மீன் குஞ்சுகளின் உற்பத்தியை 150 மில்லியன் வீதம் அதிகரிக்க வேண்டும். இதற்கு களுகங்கை, மொரகஹகந்த மற்றும் இங்கினிமிட்டிய வாவிகள் சார்ந்து எதிர்வரும் 5 வருடங்களுக்குள் 3 புதிய இனப்பெருக்க நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் சகல வாவிகளிலும் மீன் குஞ்சுகளை அதிகரிப்பதற்கு குளத் தொகுதிகள் வீதம் நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • · மேற்குறித்த நடவடிக்கைகள்மூலம் அதிகரிக்கும் மீன் அறுவடையின் அறுவடைக்குப் பிந்திய இழப்பைக் குறைத்து அதன் நன்மை நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிசெய்வதற்கு மீனவக் குடும்பங்களின் பெண்களை முதன்மைப்படுத்தி பெறுமதிசேர் நிகழ்ச்சித்திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன.

(ஆ ) ஏற்புடையதன்று.

 

 

 

 

பதில் தேதி

2025-07-09

பதில் அளித்தார்

கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks