01

E   |   සි   |  

 திகதி: 2025-04-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0576/2025: க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளுக்காக நடாத்தப்படும் தனியார் வகுப்புகள்: ஒழுங்குறுத்தல்

576/2025
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் தனியார் வகுப்புகள் தொடர்பான ஒழுங்குறுத்தல்கள் காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி தனியார் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் கல்வித் தகைமைகள் பற்றி அறிந்துள்ளாரா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) இன்றளவில் பாடசாலை நாட்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 2.00 மணி வரை க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளை இலக்காகக் கொண்டு தனியார் வகுப்புகள் நடாத்தப்படுகின்றமையை அறிவாரா என்பதையும்;
(vi) மேற்படி தனியார் வகுப்புகளை நடாத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(vii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(viii) மேலே (v) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தனியார் வகுப்புகள் நடாத்தப் படுகின்றமையால் அரசாங்கப் பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதகமான தாக்கம் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-08

கேட்டவர்

கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-04-08

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks